வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: வியாழன், 9 ஏப்ரல் 2020 (09:15 IST)

#Moonutomaster இணையத்தில் அனல் பறக்கும் அனிருத்தின் குட்டி ஸ்டோரி!

குத்தாட்டம், காதல், காதல் தோல்வி,உள்ளிட்ட அனைத்து வகையான பாடல்களை கொடுத்து படத்தின் ஹீரோவுக்கு நிகராக பேமஸ் ஆன இசையமைப்பாளராக சிறந்து விளங்குகிறார் அனிருத். கடந்த 2012ம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளிவந்த 3 படத்தின் மூலம் அறிமுகமான அனிருத் முதல் படத்தின் "கொலவெறி" பாடலிலேயே கொலவெறி ஹிட் அடித்து பேசப்படும் திறமைசாலியாக மாறினார்.

விஜய்யின் கத்தி தீம் ம்யூஸிக், அஜித் ரசிகர்களை ஆட்டம் போட வைத்த ஆலுமா டோலுமா, தலைவர் ரசிகர்களை குத்தாட்டம் போட வைத்த மரண மாஸ், சும்மா கிழி அதையடுத்து தற்போது விஜய்யின் மாஸ்டர் பட குட்டி ஸ்டோரி வரை தொட்டதெல்லாம் ஹிட் தான்.

இந்நிலையில் தற்போது தனது 8 வருட திரைப்பயணத்தில் ஹிட் அடித்த பாடல்களின் தொகுப்பை நேற்று தனது யூடியூப் சேனலில் லைவ் சாட் மூலம் ரசிகர்களுடன் கலந்துரையாடி பாடல்களை பாடினார். இந்த வீடியோ தற்போது யூடியூபில் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.