திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : புதன், 8 ஏப்ரல் 2020 (08:54 IST)

சீனாக்காரன் சாப்டதுக்கு நாங்க கைய கழுவணுமா? சாண்டி பாடிய கொரோனா பாடல்!

வைரலாகும் சாண்டியின் கொரோனா பாடல்

தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களுக்கு நடனம் கற்றுத்தருபவர் டான்ஸ் மாஸ்டர் சாண்டி. இவர் சொந்தமாக நடன பள்ளி ஒன்றை நடத்தி வருகிறார். இதற்கிடையில் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இரண்டாம் இடத்தை பெற்றார்.

இந்நிலையில் தற்போது கொரோனா ஊரடங்கு உத்தரவின் காரணமாக அனைவரும் வீட்டில் இருந்துவரும் நேரத்தில் சாண்டி தனது செல்ல மகள் லாலாவுடன் கொரோனா பாடல் ஒன்றை உருவாக்கி தனது சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.