புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : வியாழன், 4 பிப்ரவரி 2021 (23:54 IST)

'மாஸ்டர்' படக் கலைஞருக்கு திருமணம்.....லோகேஷ் கனகராஜ் வாழ்த்து !

தளபதி விஜய் நடித்த ‘மாஸ்டர்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி ரூ.200க்கு மேல் வசூல் குவித்து வெற்றிகரமாக ஓடிவருகிறது. இந்த படத்தில்  எடிட்டராகப் பணிபுரிந்த ஃபிலோமின் ராஜ் என்பவரின் திருமணத்திற்கு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய்சேதுபதி, மாளவிகா மோகனன் உள்ளிட்ட பலர் நடித்த திரைப்படம் ‘மாஸ்டர்’. கடந்த பொங்கல் தினத்தில் வெளியான இந்த திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது

இந்நிலையில் ,லோகேஷின் படங்களில் எடிட்டராகப் பணிபுரிந்து வருபவர் ஃபிலோமின்ராஜ். இவர் ஏற்கனவே கைதி, மாநகரம், மஸ்டர், விஷ்ணுவிஷாலின் ராட்சசன் உள்ளிட்ட படங்களி; எடிட்டராகப் பணியாற்றியுள்ளார்.

இவர் தனது காதலி திவ்யா பிரதீபா என்பவரை  திருமணம் செய்துகொண்டார்.

இந்த தம்பதியர்க்கு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.
அதில், இன்று முதல் புதிய பாதையில் ஆரம்பிக்கவுள்ள ஃபிலோமின்ராஜ் மற்றும் திவ்ய பிரதீபாவிற்கு எனது வாழ்த்துகள்.  புதிய பயணம் இனிதே மகிழ்ச்சியுடம் தொடங்கட்டும் எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் அடுத்து அவர் இயக்கவுள்ள விக்ரம் படத்திற்கும் ஃபிலோமின்ராஜ்தான் எடிட்டராக இருப்பார் எனத் தெரிகிறது.