வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Updated : வியாழன், 19 அக்டோபர் 2023 (08:34 IST)

தளபதி மாஸ்.. லோகேஷ் தரமான சம்பவம்.. அனிருத் கலக்கல்.. ‘லியோ’ ட்விட்டர் விமர்சனம்..!

vijay- lokesh kanakaraj
தளபதி விஜய் நடித்த லியோ திரைப்படம் இன்று வெளியாகி உள்ள நிலையில் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் இந்த படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வருகிறது.

தமிழகம் தவிர கேரளா கர்நாடகா தெலுங்கானா ஆந்திரா ஆகிய மாநிலங்களில் அதிகாலை 4 மணி காட்சிகள் தொடங்கிய நிலையில் இந்த படத்தின் முதல் காட்சியை பார்த்த விஜய் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர்.

குறிப்பாக விஜய் மாஸ் ஆக்ஷன் காட்சிகள், லோகேஷ் கனகராஜின் தரமான திரைக்கதை, அனிருத் கலக்கல் பின்னணி இசை ஆகியவை படத்தின் பிளஸ் பாயிண்ட்கள் என்றும் த்ரிஷாவின் நடிப்பு சூப்பர் என்றும் சஞ்சய் தத் மற்றும் அர்ஜுன் நடிப்பில் கலக்கி இருக்கிறார்கள் என்றும் விமர்சனங்கள் எழுதி வருகின்றனர்.

மொத்தத்தில் இந்த படத்தை விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பு ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் இந்த படத்தின் முதல் காட்சி 9 மணிக்கு தொடங்க இருப்பதால் அதன் பிறகு  என்ன விமர்சனம் வருகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Edited by Siva