திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: புதன், 18 அக்டோபர் 2023 (17:51 IST)

காலையிலிருந்து தொடர் அழைப்புகள்.. டயர்ட் ஆகிவிட்டேன்.. ‘லியோ’ குறித்து கஸ்தூரி..!

லியோ திரைப்படம் குறித்து பேச காலையிலிருந்து பல சேனல்கள் தன்னை அழைத்ததாகவும் முடியாது என்று கூறி தனக்கு டயர்டு ஆகிவிட்டதாகவும் நடிகை கஸ்தூரி தனது சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார். 
 
தளபதி விஜய் நடித்த லியோ திரைப்படம் நாளை வெளியாக இருக்கும் நிலையில் இந்த படம் குறித்த பிரச்சனைகள் குறித்து கிட்டத்தட்ட அனைத்து சேனல்களிலும் விவாதம் நடத்தி வருகிறது. 
 
காவிரி பிரச்சனை உள்பட பல மக்கள் பிரச்சனையை விடுத்து லியோ பிரச்சனையை சேனல்கள் கையில் எடுத்திருப்பது பொதுமக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
இந்த நிலையில் நடிகை கஸ்தூரி தனது சமூக வலைதளத்தில் காலையிலிருந்து தொடர் அழைப்புகள், அனைத்தையும் மறுத்து டயர்ட் ஆகிவிட்டது. தமிழ்நாட்டின் தலையாய பிரச்சனையான லியோ 4 மணி காட்சி குறித்து விவாதிக்காத சேனல் ஏதும் இருந்தால் எனக்கு சொல்லுங்கள் என்று தெரிவித்துள்ளார்.
 
Edited by Mahendran