வெள்ளி, 12 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Modified: வெள்ளி, 10 நவம்பர் 2023 (12:33 IST)

‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' படம் வெற்றி பெற வேண்டி லாரன்ஸ் சாமி தரிசனம்

ragava lawrance
2014ஆம் ஆண்டு வெளியான ஜிகர்தண்டா படத்தின் இரண்டாம் பாகத்தை இப்போது இயக்கியுள்ளார்.

ஜிகர்தண்டா 2 வில் ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ் ஜே சூர்யா  உள்ளிட்ட  நடிகர்கள் நடித்துள்ளனர்.

பீஸா, பேட்ட உள்ளிட்ட பல படங்களை இயக்கிய கார்த்திக் சுப்பராஜ் இப்படத்தை பீரியட் திரைப்படமாக உருவாக்கியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த படம் தீபாவளியையொட்டி இன்று  ரிலீஸ் ஆகியுள்ளது. இப்படத்தின் முதல் நாள் முதல் காட்சியை ரசிகர்களுடன் காண தியேட்டருக்கு ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படக்குழுவினர் வருகை தந்தனர்.

இப்படத்தைக் காண நடிகர் ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ்.ஜே.சூர்யா, கார்த்திக் சுப்புராக் ஆகியோர் சென்னை வெற்றி தியேட்டருக்கு  வருகை தந்தனர்.
ragava lawrance

இதையடுத்து, இப்படம் வெற்றி பெற வேண்டி  நடிகர் ராகவா லாரன்ஸ், திருவொற்றியூரில் உள்ள தியாகராஜ சுவாமி வடிவுடையம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்துள்ளார்.

இந்த நிலையில்,ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் முதல் காட்சி காலை 9 மணிக்கு தொடங்க வேண்டும் எனவும்   இன்று முதல்    15 ஆம் தேதி வரை சிறப்பு காட்சி திரையிடலாம் என அரசு அறிவித்தது குறிப்பிடத்தக்கது.