1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 6 நவம்பர் 2023 (07:43 IST)

தமிழ் நாட்டில் சாதனைப் படைத்த லியோ… ஆனால் தியேட்டர் அதிபர்கள் அதிருப்தி!

கடந்த அக்டோபர் 19 ஆம் தேதி ரிலீஸ் ஆன லியோ திரைப்படம் இதுவரை 541 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளது. இந்த திரைப்படத்தின் வெற்றி விழா நேற்று முன் தினம் சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. அதில் நடிகர் விஜய் உள்ளிட்ட படத்தில் பணியாற்றிய பல நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் பங்கேற்று பேசினார்கள்.

இந்த நிகழ்ச்சியில் விஜய்யின் பேச்சு, அவர் சொன்ன குட்டிக்கதை மற்றும் படத்தின் இணை இயக்குனர் ரத்னகுமார் ஆகியோரின் பேச்சு இணையத்தில் கவனத்தையும் சர்ச்சைகளையும் கிளப்பியது.

இந்நிலையில் லியோ படம் தமிழக வசூலில் ஒரு சாதனையைப் படைத்துள்ளது. லியோ படத்தின் வசூலின் மூலம் விநியோகஸ்தர்களுக்கு பங்காக 100 கோடி ரூபாய் கிடைத்துள்ளதாம். இந்த படத்துக்கு பல திரையரங்குகளில் விநியோகஸ்தர்கள் பங்காக 80 சதவீதம் வாங்கியதால் இவ்வளவு பெரிய தொகை கிடைத்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் லியோ படத்தை திரையிட்ட திரையரங்குகளுக்கு பெரிய லாபமில்லை என்று சொல்லப்படுகிறது.