வெள்ளி, 31 மார்ச் 2023
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified புதன், 23 நவம்பர் 2022 (08:44 IST)

முறிந்ததா வெற்றிமாறன் – லாரன்ஸ் கூட்டணி?.. அதிகாரம் படத்தின் நிலை என்ன?

ராகவா லாரன்ஸ் நடிப்பில் துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகும் திரைப்படத்தின் டைட்டில் அதிகாரம் என அறிவிக்கப்பட்டது.

ராகவா லாரன்ஸ் நடிப்பில் துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகும் திரைப்படத்தின் டைட்டில் ‘அதிகாரம்’ என சில மாதங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது. இந்த படத்தின் கதை வசனத்தை பிரபல இயக்குனர் வெற்றிமாறன் எழுதுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அதிகாரம் படத்தின் டைட்டில் உடன் கூடிய பஸ்ட் லூக் மோஷன் போஸ்டர் இன்று வெளியாகியுள்ள பெரிய அளவில் வைரல் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் அறிவிக்கப்பட்டதற்குப் பின்னர் இந்த படம் அடுத்த கட்டத்தை நோக்கி நகரவில்லை. இந்நிலையில் இப்போது இயக்குனர் துரை செந்தில்குமார், நயன்தாரா நடிக்கும் புதிய படத்தை இயக்க சென்றுவிட்டார்.

இதனால் அதிகாரம் திரைப்படம் கைவிடப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கதையில் லாரன்ஸுக்கு உடன்பாடு இல்லாததால், அந்த படத்தை அவர் நிராகரித்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.