1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: திங்கள், 7 நவம்பர் 2022 (20:41 IST)

ஆண்ட்ரியாவின் பாடலை வெளியிடும் திமுக எம்பி கனிமொழி!

Kanimozhi
நடிகை ஆண்ட்ரியா நடித்த படத்தின் பாடலை திமுக எம்பி கனிமொழி வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன 
 
நடிகை ஆண்ட்ரியா நடித்துள்ள திரைப்படம் ’அனல் மேலே பனித்துளி’. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்க விவேக் அறிவு உமாதேவி ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளனர் 
 
வெற்றிமாறன் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்தின் ஒரு பாடலை திமுக எம்பி கனிமொழி  நாளை காலை 11 மணிக்கு வெளியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது 
 
இந்த பாடலை உமாதேவி எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் நவம்பர் மாதம் 18 ஆம் தேதி சோனி ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 
Edited by Siva