ஞாயிறு, 2 பிப்ரவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 15 நவம்பர் 2022 (20:45 IST)

குற்றச்செயல்களுக்கு கடுமையான தண்டனை - தாலிபான்கள் உத்தரவு

Taliban
கொலை கடத்தல்  உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபடுவோருக்கு இஸ்லாமிய சட்டத்தின்படி தண்டை கொடுக்க வேண்டும் என தாலிபான்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2020 ஆம் ஆண்டு அமெரிக்க  நாட்டு அதிபர் தேர்தல் அறிக்கையில் கூறியபடி, ஆப்கானிஸ்தானை விட்டு அமெரிக்க ராணுவம் தங்கள் படைகளை வாபஸ் பெற்றது.

இதையடுத்து, பழமைவாதிகளான தாலிபான்கள் கையில் ஆட்சி அதிகாரம் சென்றது. ஏற்கனவே,  மக்களின் அடிப்படை   உரிமைகளில் தலையிட்டு, குழந்தைகள், பெண்களுக்கு எதிராக பல சட்டங்களை அமல்படுத்தியுள்ள சர்ச்சையாகியுள்ள  நிலையில் தற்போது குற்றச் செயல்களில் ஈடுபடுவோருக்கு இஸ்லாமிய சட்டப்படி தண்டனையளிக்க வேண்டுமென கூறியுள்ளனர்.

இந்த நிலையில், தாலிபான்களின் தலைவர்   மவ்லவி ஹெபத்துல்லா நீதிபதிகளுக்கு புதிய உத்தரவிட்டுள்ளார். அதில், கொலை, கொள்ளை உள்ளிட்ட  முற்றச்செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு  இஸ்லாமிய சட்டப்படி கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Edited by Sinoj