திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: சனி, 25 மே 2024 (09:26 IST)

நெட்பிளிக்ஸ் தளத்தில் ‘அனிமல்’ படத்தின் சாதனையை முறியடித்த ‘லால்பட்டா லேடீஸ்’!

கடந்த மாதம் நெட்பிளிக்ஸ் தளத்தில் லால்பட்டா லேடீஸ் என்ற திரைப்படம் வெளியானது. அமீர்கான் தயாரித்திருந்த இந்த படத்தை அவரின் முன்னாள் மனைவி கிரண் ராவ் இயக்கி இருந்தார். இந்த படம் வெளியானது முதலே பாஸிட்டிவ்வான விமர்சனங்களைப் பெற்று வந்தது.

20 ஆண்டுகளுக்கு முன்னர் நடப்பது போன்று உருவாக்கப்பட்ட இந்த கதையில் வட இந்தியப் பகுதிகளில் நடக்கும் ஒரு மூட நம்பிக்கையின் காரணமாக திருமன தினத்தன்று இரண்டு ஜோடிகளின் மணமக்கள் மாறிப் போய்விட, அவர்கள் தங்கள் இணைகளை தேடி கண்டடைவதை நகைச்சுவையாகவும், உணர்ச்சிப் பூர்வமாகவும் சொல்லியிருந்தனர். இந்த படத்தில் பெண்களுக்கு எதிரான மூடநம்பிக்கைகள் பற்றி பேசப்பட்டது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

இந்நிலையில் நெட்பிளிக்ஸில் ஸ்ட்ரீம் ஆனதில் இருந்து இந்த படம் 13.8 மில்லியன் பேரால் பார்க்கப்பட்டு சாதனைப் படைத்துள்ளது. இதற்கு முன்னர் இந்தியாவில் ரன்பீர் கபூர் நடித்த ‘அனிமல்’ திரைப்படம்தான் அதிக பார்வையாளர்களால் பார்க்கப்பட்ட படம் என்ற சாதனையை நிகழ்த்தியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.