செவ்வாய், 8 அக்டோபர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 15 பிப்ரவரி 2024 (08:07 IST)

“முடிந்தது பிரேக்.. அடுத்த படத்தின் ஷூட்டிங்கை தொடங்கிவிட்டேன்”… அமீர் கான் அறிவிப்பு!

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமீர்கானின் கடைசி படமாக லால் சிங் சத்தா கடந்த ஆண்டு ரிலீஸ் ஆனது. ஆனால் இந்த திரைப்படம்  படுதோல்வி அடைந்தது. அதையடுத்து அவர் சினிமாவில் இருந்து அவர் ஒரு இடைவெளி எடுத்துக் கொள்ளப் போவதாக அறிவித்தார்.

அதனால் 2023 ஆம் ஆண்டு அவர் படம் எதுவும் ரிலீஸ் ஆகவில்லை. இந்நிலையில் இப்போது தன்னுடைய அடுத்த படத்துக்கான பணிகளை அமீர்கான் தொடங்கியுள்ளார். அவர் நடிக்க உள்ள அடுத்த படத்துக்கான முன் தயாரிப்புப் பணிகள் நடந்து வந்தன.

இந்நிலையில் இப்போது ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அமீர்கான் “என் அடுத்த படத்தின் ஷூட்டிங்கை கடந்த வாரமே தொடங்கி விட்டேன். அந்த படத்தின் டைட்டில் ‘சித்தாரே ஜமின் பர்’. இது தாரே ஜமின் பர் படத்தின் அடுத்தகட்டம்.   இரண்டு படங்களும் வேறு கதைக்களத்தைக் கொண்டவை. பிரசன்னா இயக்கி வரும் இந்த படம் சிறந்த நகைச்சுவை பொழுதுபோகு படமாக இருக்கும்’ எனக் கூறியுள்ளார்.