ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: சனி, 16 டிசம்பர் 2023 (07:17 IST)

யோகி பாபு படத்துக்கு விளம்பரம் செய்யும் அமீர் கான்…!

இயக்குனர் சிம்புதேவன் இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தவர். அந்த படத்தில் அவர் வடிவேலுவைக் காட்சிப்படுத்தியவிதமும், நகைச்சுவைக் காட்சிகளும் இன்றளவும் சிரிப்புமழையை வரவழைக்கும் விதத்திலானவை.

அந்த படத்த்தின் மிகப்பெரிய வெற்றிக்குப் பின்னர் அறை எண் 305-ல் கடவுள், புலி, ஒரு கண்ணியும் 3 களவாணிகளும் ஆகிய படங்களை இயக்கினார். இதையடுத்து வெற்றிக்கூட்டணியான இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி படத்தின் இரண்டாம் பாகத்துக்காக வடிவேலுவுடன் இணைந்தார். ஆனால் அந்த படத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரோடு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அதில் தொடர்ந்து நடிக்க மறுத்தார். அதனால் அந்த படம் இப்போது கைவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் சிம்புதேவன் தற்போது யோகி பாபுவை கதாநாயகனாக நடிக்க போட் (Boat) என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் முழுக்க முழுகக் கடலில் நடக்கும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது. சர்வைவல் ஜானரில் இந்த படம் உருவாகியுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தின் டீசர் டிசம்பர் 16 ஆம் தேதி துபாயின் Al Ghurair centre ல் நடக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் இந்த டீசரை இணையத்தில் பாலிவுட் நடிகர் அமீர்கான் வெளியிட உள்ளார். மேலும் விஜய் சேதுபதி, நாக சைதன்யா, கிச்சா சுதீப் மற்றும் பிருத்விராஜ் உள்ளிட்டவர்களும் இணையத்தில் வெளியிடுகின்றனர். இந்த படத்தின் கதையைக் கேட்டு வியப்படைந்த அமீர்கான் டீசரை வெளியிட சம்மதித்துள்ளதாக சொல்லப்படுகிறது.