1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified வெள்ளி, 19 ஆகஸ்ட் 2022 (15:48 IST)

லட்சுமி ராமகிருஷ்ணனின் அடுத்த படம்: டைட்டில் இதுதான்!

Lakshmi Ramakrishnan
நடிகை மற்றும் இயக்குநர் லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கி வரும் அடுத்த படத்தின் டைட்டில் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. 
 
ஆரோகணம், நெருங்கி வா முத்தமிடாதே, அம்மணி, ஹவுஸ் ஓனர் ஆகிய நான்கு படங்களை இயக்கியவர் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன்.  இந்த நிலையில் தற்போது ஒரு படத்தை இயக்கி வரும் நிலையில் அந்த படத்திற்கு ’ஆர் யூ ஓகே பேபி’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
சமுத்திரக்கனி, அபிராமில், மிஷ்கின், ஆடுகளம், நரேன் ரோபோ சங்கர் உள்பட பலர் நடிக்கும் இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார். லட்சுமி ராமகிருஷ்ணன் இந்த படத்தை தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை உள்பட பல பகுதிகளில் நடைபெற்றது. இது குழந்தைகள் பற்றிய படம் என்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து பேசும் படம் என்றும் முற்றிலும் மாறுபட்ட படமாக இது இருக்கும் என்றும் லட்சுமி ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்