செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 12 ஆகஸ்ட் 2022 (15:22 IST)

மிஷ்கின் நடிப்பு… இளையராஜா இசை… லஷ்மி ராமகிருஷ்ணன் இயக்கும் அடுத்த படம்!

தொலைக்காட்சி நிகழ்ச்சியான சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியின் மூலம் பிரபலம் ஆனவர் நடிகர் லஷ்மி ராமகிருஷ்ணன்.

பல திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்திருந்தாலும் பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரபரப்பான  சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன். ஆனாலும் அவர் நிகழ்ச்சி தொகுப்பாளர், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் எனப் பன்முகத் தன்மை கொண்டவர். இந்நிலையில் அவரின் பழையப் புகைப்படம் ஒன்று இப்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே இவர் அம்மணி மற்றும் ஹவுஸ் ஓனர் உள்ளிட்ட இரண்டு படங்களை இயக்கியுள்ள நிலையில் தற்போது மூன்றாவது படத்தை இயக்க உள்ளார். இந்த படத்துக்கு இளையராஜா இசையமைக்க உள்ளார். சமுத்திரக்கனி, மிஷ்கின் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது.