திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: புதன், 15 பிப்ரவரி 2023 (19:03 IST)

லைகாவின் 24 வது பட ஃபர்ஸ்ட்லுக் நாளை ரிலீஸ்

lyca
தமிழ் சினிமாவின் முன்னணி படத் தயாரிப்பு நிறுவனமான லைகா தன் அடுத்த படத்தின் அப்டேட் கொடுத்துள்ளது.

இலங்கையைச் சேர்ந்த லைகா நிறுவனம். இதன் தலைவராக சுபாஸ்கரன் உள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் விஜய்- முருகதாஸ் கூட்டணியில் உருவான கத்தி படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகம் ஆகினர்.

அதன்பின்னர், 2.0, தானா சேர்ந்த கூட்டம், பொன்னியின் செல்வன் என்று பிரமாண்ட படங்களை தயாரித்தனர். அதன்பின்னர், தற்போது லால்சலாம், பொன்னியின் 2 , ஆகிய படங்களைத் தயாரித்து வருகின்றனர்.

இந்த  நிலையில், லைகா நிறுவனத்தின் 24 படத்தின் ஃபர்ஸ்ட்லுக் நாளை காலை 10:30 மணிக்கு வெளியாகும் என்று  தன் டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளனர்.

இதனால், ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.