1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: செவ்வாய், 14 பிப்ரவரி 2023 (14:44 IST)

காஷ்மீரில் லியோ ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்களை வெளியிட்ட த்ரிஷா!

நடிகை த்ரிஷா காஷ்மீரில் நடைபெற்று வரும் லியோ படத்தின் படப்பிடிப்பிலிருந்து திரும்பிவிட்டதாகவும் அவர் அந்த படத்தில் இருந்து விலகி விட்டதாகவும் வதந்திகள் பரவின.

காஷ்மீர் குளிர் அவருக்கு ஒத்துக்கொள்ளவில்லை என்பது உள்பட பல வதந்திகள் பரவின. ஆனால் படத்தின் சண்டைக் காட்சிகளைப் படமாக்குவதால் த்ரிஷாவுக்கு ஷூட் இல்லை என்பதால் அவர் திரும்பியதாகவும் சொல்லப்பட்டது. அதையடுத்து சில நாட்களில் திரிஷா மீண்டும் காஷ்மீருக்கு திரும்பியதாக சொல்லப்பட்டது.

இந்நிலையில் இப்போது திரிஷா காஷ்மீரில் இருக்கும் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட அது வைரல் ஆகி வருகிறது.