ஹிட்டு கொடுத்து ரொம்ப நாள் ஆச்சு… ரூம்போட்டு விவாதிக்கும் பிரபல இயக்குனர்!
இயக்குனர் சுசீந்திரன் தமிழ் சினிமாவில் பல ஹிட் படங்களைக் கொடுத்து முன்னணி இயக்குனராகியுள்ளார்.
வெண்ணிலா கபடி குழு திரைப்படம் மூலமாக அறிமுகமான சுசீந்திரன் அடுத்தடுத்து நான் மகான் அல்ல, ஜீவா மற்றும் பாண்டிய நாடு உள்ளிட்ட ஹிட் படங்களைக் கொடுத்தார். ஆனால் அதன் பின்னர் அவர் இயக்கிய படங்கள் தோல்விப் படங்களாக அமைந்தன.
இப்போது சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகும் வள்ளிமயில் படத்தில் விஜய் ஆண்டனி கதாநாயகியாக நடிக்கிறார். இந்த படத்தில் சத்யராஜ் மற்றும் பாரதிராஜா உள்ளிட்டோரும் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். 1980 கால கட்டங்களில் நடக்கும் கதையாக பிரம்மாண்டமாக வடிவமைக்கப்பட்டு, மிகுந்த பொருட்செலவில் தயாரிக்கப் பட்டு தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி மொழிகளில் வெளியாக இருக்கிறது. விஜய் ஆண்டனி விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்று வருவதால் வள்ளிமயில் ஷூட் நிறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் தனது அடுத்த படத்தின் கதைகளை தனது குழுவோடு இப்போது திரைக்கதை விவாதத்தில் ஈடுபட்டு வருவதாக சொல்லப்படுகிறது. அவரின் அடுத்த படம் ஹரிஷ் கல்யாணுடன் இருக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.