1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 19 ஜனவரி 2018 (12:00 IST)

உங்கள் முகத்தில் துப்பிக்கொள்ளுங்கள் ; சன் மியூசிக் தொகுப்பாளினிகளை திட்டிய ஞானவேல்ராஜா

நடிகர் சூர்யாவை அவரின் உயரத்தை வைத்து கிண்டலடித்த சன் தொலைக்காட்சி தொகுப்பாளினிகளுக்கு சினிமாத் துறையினரின் கண்டனம் வலுத்து வருகிறது.

 
சன் மியூசிக்கில் பேசிய இரண்டு தொகுப்பாளினிகள் சூர்யா படத்தில் அமிதாப் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளதாகவும், இருவரும் சேர்ந்து நடிக்கும் காட்சியில் சூர்யா ஸ்டூல் போட்டுத்தான் நடிக்க வேண்டும் என்று ஒரு தொகுப்பாளினி கிண்டலடித்தார். அதற்கு இன்னொரு தொகுப்பாளினி, இருவரையும் உட்கார வைத்து படமாக்கினால் உயரம் பிரச்சனை வராது என்றும் கலாய்த்தார். இதற்கு சூர்யாவின் ரசிகர்கள் மற்றும் சினிமாத்துறையினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
 
இதுபற்றி நடிகர் விஷால் தனது டிவிட்டர் பக்கத்தில் “நகைச்சுவை என்ற பெயரில் நீங்கள் செயல் மிகவும் கீழ்த்தரமானது” என பதிவிட்டிருந்தார்.

 
அதேபோல், சூர்யாவிற்கு மிகவும் நெருக்கமானவரும், அவரை வைத்து பல  படங்களை தயாரித்து வரும் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா “முட்டாள்கள். மனநல மருத்துவமனையில் அவர்களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும். கண்ணாடியை உங்கள் முகத்தை பார்த்து நீங்களே துப்பிக் கொள்ளுங்கள்” என கடுமையாக திட்டியுள்ளார்.