திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வெள்ளி, 19 ஜனவரி 2018 (06:49 IST)

'அருவி' தயாரிப்பாளரை ஆத்திரப்பட வைத்த விஜய் ரசிகரின் டுவீட்

சூர்யாவின் உயரத்தை கிண்டல் செய்து சன் மியூசிக் சேனலில் ஒளிபரப்பான நிகழ்ச்சிக்கு கண்டனங்கள் வலுத்து கொண்டே வரும் நிலையில் தற்போது நடிகர் சங்க செயலாளர் விஷாலும் தனது டுவிட்டரில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதே டுவீட்டில் கருத்து கூறிய 'அருவி' தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு, 'அங்க யாருக்கும் மூளை வளர்ச்சியப் பத்தியெல்லாம் அக்கறை இல்லையா? என்று கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு ஒரு விஜய் ரசிகர் 'தம்பி பிரபு நீ கிழம்பு! அருவி போல தரமான படத்தில தளபதி பத்தி தப்பா பேசின ஆளு நீ , நீ எல்லாம் பஞ்சாயத்து பேசலாமா? என்று பதிவு செய்தார்

இந்த விஜய் ரசிகருக்கு பதில் கூறிய எஸ்.ஆர்.பிரபு, 'உனக்கு பதில் சொன்னா டேமேஜ் உனக்கில்ல...நான் திரு.விஜய் அவர்களை மதிக்கிறேன். அதனால... மூடிட்டு போ!! என்று ஆத்திரத்துடன் ஒரு டுவீட்டை பதிவு செய்துள்ளார். இதனால் டுவிட்டரே பரபரப்புடன் உள்ளது.