1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 10 ஜூலை 2020 (14:18 IST)

குமரிமுத்துவின் மகளா இது? அதே சிரிப்பு என நெட்டிசன்கள் கமெண்ட்!

குமரிமுத்துவின் மகளா இது?
நகைச்சுவை நடிகர் குமரிமுத்துவை தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. கடந்த பல ஆண்டுகளாக நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் காமெடி வேடங்களில் நடித்து அனைவரையும் கவர்ந்தவர் குமரிமுத்து என்பதும் அவரது டிரேட் மார்க் சிரிப்பு இன்றுவரை புகழ் பெற்றது என்பதும் தெரிந்ததே 
 
இந்த நிலையில் குமரிமுத்துவை தெரிந்தவர்களுக்கு அவரது குடும்பத்தைப் பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஏனெனில் அவர் தன் குடும்பத்தினரை வெளி உலகுக்கு அழைத்து வந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் குமரிமுத்து கடந்த சில வருடங்களுக்கு முன் மரணமடைந்த நிலையில் தற்போது அவரது மகள் எலிசபெத் முதல் முதலாக சமூக வலைத்தளம் ஒன்றில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்
 
அந்த வீடியோவில் தான் தற்போதுதான் முதன் முதலாக மீடியாவை சந்திப்பதாகவும் இனிமேல் அடிக்கடி பொது மக்களை சந்திக்க இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தனது முதல் வீடியோவில் தன்னுடைய அனுபவம் ஒன்றை சொல்ல விரும்புவதாக அவர் கூறியுள்ளார். வாழ்க்கையில் எல்லோரும் வெற்றி பெற வேண்டும் என்று விரும்புவோம். ஆனால் அது அனைவருக்கும் நடப்பது இல்லை
 
ஆனால் உண்மையில் எல்லோரும் வெற்றி பெறலாம். அதற்கு ஒரு சின்ன விஷயத்தை நாம் கடைப்பிடிக்க வேண்டும். அதுதான் அமைதி. வாழ்க்கையில் அமைதியை கடைபிடித்தால் நிச்சயம் நாம் எதை அடைய வேண்டுமோ அதை அடையலாம் நமக்கு வெற்றியும் கிடைக்கும் என்று குமரிமுத்து மகள் எலிசபெத் கூறியுள்ளார்
 
இந்த வீடியோவுக்கு கமெண்ட் அடித்த ரசிகர்கள் பலரும் தந்தை குமரிமுத்து சிரிப்பு போலவே அவரது சிரிப்பும் இருப்பதாக பதிவு செய்து வருகின்றனர்