திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 29 ஜூன் 2020 (11:32 IST)

ஷூட்டிங் என்று சொல்லி என்னை ஏமாத்திட்டாங்க: பீட்டர்பால் முதல் மனைவி அதிர்ச்சி பேட்டி

ஷூட்டிங் என்று சொல்லி என்னை ஏமாத்திட்டாங்க
வனிதா மற்றும் பீட்டர்பால் திருமணம் நேற்று முன்தினம் நடைபெற்ற நிலையில் இந்தத் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏற்கனவே காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ள பீட்டர்பாலின் முதல் மனைவி எலிசபெத், வனிதாவுக்கும் பீட்டர்பாலுக்கும் நடந்தது திருமணம் என்று தனக்கு தெரியாது என்றும் ஒரு திரைப்படத்தின் படப்பிடிப்பு என்றே தான் நினைத்ததாகவும் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் 
 
தனியார் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள பீட்டரின் முதல் மனைவி ஹெலன், தனக்கு விவாகரத்து கொடுக்காமல் மறுமணம் செய்ய மாட்டேன் என்று தனது கணவர் உறுதி அளித்து இருந்ததாகவும் ஆனால் விவாகரத்து ஆவதற்கு முன்பே அவர் வனிதாவை திருமணம் செய்துகொண்டது தனக்கு அதிர்ச்சி அளிப்பதாக கூறியுள்ளார் 
 
மேலும் வனிதாவுடன் திருமணமா என்று தான் கேட்டதற்கு அது திருமணம் இல்லை வெறும் படப்பிடிப்பு என்று மட்டுமே தன்னிடம் கூறியதாகவும் ஆனால் தற்போது பத்திரிகைகளில் வெளி வந்துள்ள செய்தியை பார்த்து திருமணம் என்பது தனக்கு தெரியவந்ததால் அதிர்ச்சி அடைந்ததாகவும் அவர் கூறி தனது குழந்தைக்கு தகப்பன் வேண்டும் என்றும் தனக்கு கணவர் வேண்டும் என்றும் தன்னுடைய கணவர் என்னதான் தவறு செய்திருந்தாலும் அவர் என்னுடைய கணவர் தான் என்றும் அவரை விட்டுக் கொடுக்க முடியாது என்றும் கூறினார்.
 
மேலும் வனிதா எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் தனக்கு கவலை இல்லை என்றும், தன்னுடைய கணவரை மீட்டு எடுக்காமல் விடமாட்டேன் என்றும் பீட்டரின் முதல் மனைவி எலிசபெத் ஹெலன் என்பவர் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது