1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: திங்கள், 14 மார்ச் 2022 (19:15 IST)

சூர்யா-பாலா படத்தில் இணையும் லிங்குசாமி ஹீரோயின்!

சூர்யா நடிப்பில் பாலா இயக்கத்தில் உருவாக இருக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் ராமேஸ்வரத்தில் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
 
இந்த படத்தில் நாயகியாக ஜோதிகா நடிப்பார் என்று கூறப்பட்டு வரும் நிலையில் நடிகை கீர்த்தி ஷெட்டி இன்னொரு முக்கிய கேரக்டரில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது 
 
இவர் லிங்குசாமி இயக்கத்தில் ராம் பொத்தினேனி நடிப்பில் உருவாகிவரும் ’தி வாரியர்’ என்ற படத்தில் நாயகியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த படத்தின் படப்பிடிப்பை மூன்றே மாதங்களில் முடிக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக இந்த படத்தை முடித்துவிட்டு சூர்யா, வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் திரைப்படத்தில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது