வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: வியாழன், 10 மார்ச் 2022 (19:24 IST)

’எதற்கும் துணிந்தவன்’ படத்தின் முருகன் பாடலை நீக்க வேண்டும்: போலீசில் புகார்

’எதற்கும் துணிந்தவன்’ படத்தின் முருகன் பாடலை நீக்க வேண்டும்: போலீசில் புகார்
எதற்கும் துணிந்தவன் படத்தில் இடம்பெற்றுள்ள முருகன் பாடலை நீக்க வேண்டும் என்று அகில இந்திய நேதாஜி கட்சி போலீசில் புகார் எழுந்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
சூர்யா நடிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள எதற்கும் துணிந்தவன் திரைப்படம் இன்று வெளியாகி உள்ளது. இந்த படத்திற்கு கலவையான விமர்சனம் வந்து கொண்டிருக்கும் நிலையில் இந்த படத்திற்கு ஏற்கனவே பாமக எதிர்ப்பு தெரிவித்து என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள முருகன் பாடல் தமிழ் கடவுள் முருகனை இழிவுபடுத்துவது போல் இருப்பதாகவும் எனவே இந்த பாடலை நீக்க வேண்டும் என்றும் அகில இந்திய நேதாஜி காட்சி காவல்துறையில் புகார் அளித்துள்ள பரபரப்பு ஏற்பட்டுள்ளது