1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 11 மார்ச் 2022 (12:09 IST)

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் கோரிக்கையை எற்க உச்சநீதிமன்றம் மறுப்பு!

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் கோரிக்கையை ஏற்க உச்ச நீதிமன்ற நீதிபதி மறுப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக சொத்துக்குவிப்பு வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
 
இந்த நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ள தனது சொத்துக் குவிப்பு வழக்குக்கு எதிரான தனது மனுவை விரைந்து விசாரிக்க வேண்டும் என ராஜேந்திரபாலாஜி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார் 
 
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் இந்த கோரிக்கையை உச்ச நீதிமன்றம் ஏற்க மறுப்பு தெரிவித்து உள்ளது என்பதும் வரிசைப்படி தான் இந்த வழக்கு விசாரணைக்கு வரும் என்று கூறப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது