திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: வியாழன், 10 மார்ச் 2022 (15:02 IST)

’எதற்கும் துணிந்தவன்’ படத்தை விளம்பரம் செய்ய தயாராக இல்லை: பாமக

சூர்யா நடித்த எதற்கும் துணிந்தவன் என்ற திரைப்படம் இன்று வெளியாகியுள்ள நிலையில் இன்று முதல் நாள் முதல் காட்சியிலேயே பல திரையரங்குகளில் 50 சதவீதம் அளவிற்கு தான் ரசிகர்கள் வந்துள்ளனர் 
 
இந்த நிலையில் பாமக விவகாரம் சூடு பிடித்தால் இந்த படத்திற்கு இலவச விளம்பரம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் எதற்கும் துணிந்தவன் படத்தை விளம்பரம் செய்ய நாங்கள் தயாராக இல்லை என்று பாமகவினர் தெரிவித்துள்ளனர் 
 
ஜெய்பீம் விவகாரம் முடிந்து போன விவகாரம் என்றும் அந்த விவகாரத்திற்காக சூர்யாவின் அடுத்த படத்தை திரையிட வேண்டாம் என்று நாங்கள் கேட்டுக் கொள்ளவில்லை என்றும் இந்த படத்திற்காக நாங்கள் எந்த பிரச்சனையும் செய்ய மாட்டோம் என்றும் எதற்கும் துணிந்தவன் படத்தை விளம்பரம் செய்ய நாங்கள் தயாராக இல்லை என்றும் பாமக கூறிவருகின்றனர் 
 
எதற்கும் துணிந்தவன் திரைப்படத்திற்கு எதிர்பார்த்த அளவிற்கு ரசிகர்கள் கூட்டம் வரவில்லை என்பதால் திரையரங்கு உரிமையாளர்கள் பெரும் சோகத்தில் உள்ளனர்