திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 25 மே 2020 (11:43 IST)

கவுண்ட்டர் மன்னன் கவுண்டமணிக்கு ஹேப்பி பர்த்டே !

தமிழ் சினிமா உலகில் 20 ஆண்டுகளுக்கு மேலாக தனது நகைச்சுவை நடிப்பால் கோலோச்சிய கவுண்டமணியின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.

1980 களில் ஹீரோக்களைத் தவிர தமிழ் சினிமாவில் இரண்டே இரண்டு பேரின் கால்ஷீட்டுக்காகதான் தயாரிப்பாளர்கள் தவம் கிடந்தனர். அதில் ஒன்று இளையராஜா மற்றவர் கவுண்டமணி. அந்த அளவுக்கு தமிழ் ரசிகர்கள் மத்தியில் புகழ்பெற்று இருந்த கவுண்டமணியின் 81 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு பலரும் அவருக்கு வாழ்த்து சொல்லி வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் 16 வயதினேலே படம் ரஜினி, கமல் மற்றும் பாரதிராஜா பல ஜாம்பவான்களை உருவாக்கியது போலவே கவுண்டமணி என்னும் நகைச்சுவை ஜாம்பவானையும் உருவாக்கியது. அதன் பின்னர் தனது உடல் மொழியாலும், கவுண்ட்டர் வசனங்களாலும் தமிழ் திரையுலகை ஆளுகை செய்ய ஆரம்பித்தார் கவுண்டமணி. 40 வயதுக்கு பின்னரே வாய்ப்புக் கிடைத்து அதன் பின்னர் அதன் மூலம் உச்சாணிக் கொம்புக்கு சென்றதில் எம் ஜி ஆருக்கும் கவுண்டமணிக்கும் மிகப்பெரிய ஒற்றுமை உண்டு.

இப்போது படங்களில் நடிப்பதில் இருந்து விலகி இருந்தாலும் தொலைக்காட்சிகள், இணையம், மீம்ஸ் வாயிலாக இன்னமும் ரசிகர்களின் தினசரி வாழ்வில் அவர் இருந்துகொண்டேதான் இருக்கிறார்.