திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : சனி, 23 மே 2020 (09:57 IST)

கிராமத்துக்கு போய் ரொம்ப கருப்பா ஆகிட்டீங்க... போட்டோவை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்!

தொகுப்பாளினி மணிமேகலை சன் மியூசிக் தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இளசுகள் மத்தியில் பிரபலமடைந்தார். கடந்த 2017ம் ஆண்டு பெற்றோர் சம்மதமின்றி நடன இயக்குனரான காதர் ஹுசைனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களின் காதலுக்கு வீட்டில் சம்மதம் தெரிவிக்காததால் தற்போது கணவருடன் தனியாக வசித்து வருகிறார்.

இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவுததால் மக்கள் அனைவரும் ஊரடங்கு உத்தரவின் கீழ் வீட்டிற்குள்ளேயே முடங்கியிருக்கின்றனர். இதற்கிடையில் தமிழகம் முழுவதும் வருகிற மே 31ம் ஆம் தேதி வரை ஊரடங்கு     உத்தரவு பிறப்பிக்கபட்டுள்ளது. இதனால் வெளியூர் சென்ற சிலர் வீடு திரும்ப முடியாமல் முழித்துக்கொண்டிருந்தனர். அந்தவகையில் தொகுப்பாளினி மணிமேகலை வேலை காரணமாக வெளியூர் சென்றுள்ளார். இதனால் சென்னை திரும்ப முடியாமல் கிராமம் ஒன்றில் மாட்டிக்கொண்டுள்ளார். அங்கிருந்த படியே கிராம குழந்தைகளுடன் விளையாடுவது , முறுக்கு சுடுவது உள்ளிட்ட பல வீடியோக்களை கடந்த 2 மாதங்களாக வெளியிட்டு வந்தார்.

இதையடுத்து சமீபத்தில் சென்னை வந்து சேர்ந்த மணிமேகலை தற்போது தனது கணவருடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட போட்டோவை இன்ஸ்டாவில் வெளியிட்டு " இனிமே எனக்கு நீ ... உனக்கு நான்... நமக்கு அந்த சமயல்கார அக்கா அவ்ளோவ்தான் என தங்களது சிட்டி வாழ்க்கையை பற்றி கூறியுள்ளார். இதனை கண்ட இணையவாசிகள் அக்கா... என்ன எவ்ளோவ் கருப்பா ஆகிட்டு இருக்கீங்க...? கூடவே கொஞ்சம் வெயிட் வேற போட்டிருக்கீங்க என ஷாக்காகி கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Village