கைமாறுகிறதா சிவகார்த்திகேயன் படம் – தயாரிப்பாளருடன் மோதல் !

Last Modified செவ்வாய், 9 ஜூலை 2019 (09:22 IST)
இன்று நேற்று நாளை இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தின் தயாரிப்புப் பொறுப்பை சிவகார்த்திகேயேனே ஏற்றுக்கொள்ள இருப்பதாகக் கூறப்படுகிறது.

ரெமோ படத்திற்குப் பின்னர் நடிகர் சிவகார்த்திக்கேயனின் ஆஸ்தான தயாரிப்பாளராக ஆர் டி ராஜா உருவெடுத்தார். தொடர்ந்து வேலைக்காரன், சீமாராஜா, இன்று நேற்று நாளை இயக்குனர் ரவிக்குமார் இயக்கும் பெயர் அறிவிக்கப்படாத சயின்ஸ்பிக்‌ஷன் படம் என வரிசையாக இணைந்தனர். இந்த படத்திற்கு இப்போது எஸ்.கே 13 என தற்காலிகப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இதில் வேலைக்காரன் படமும், சீமராஜா படமும் பட்ஜெட்டை விட அதிகமாக செலவானதால் தேவையில்லாத நஷ்டம் உருவானது. இதனால் சீமராஜா ரிலிஸீன் போது ஒரு மிகப்பெரிய தொகைக் கடனாக இருவர் தலையிலும் விழுந்தது. இதனால் நெருக்கமாக இருந்த சிவகார்த்திகேயன் ஆர் டி ராஜா உறவில் முதல் விரிசல் எழுந்தது.
 
இதையடுத்து சிவகார்த்திகேயன் வரிசையாக வெளிக்கம்பெனித் தயாரிப்பாளர்களுக்குப் படம் பண்ண ஒத்துகொண்டதால் ஆர் டி ராஜா படத்துக்கு பைனான்ஸ் கிடைப்பதில் சிக்கல் உருவானது. இதனால் இந்தப்படம் இப்போது கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதையடுத்து இந்தப்படத்தைத் தொடங்க அதிரடியாக சிவகார்த்திகேயன் ஒரு முடிவை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தப்படத்தின் மீதித் தயாரிப்பைத் தானே ஏற்றுக்கொள்ள இருப்பதாகக் கூறப்படுகிறது.இதில் மேலும் படிக்கவும் :