பிரபாஸூடன் நேருக்கு நேர் மோதும் ஜெயம் ரவி!

Last Modified திங்கள், 8 ஜூலை 2019 (21:35 IST)
'பாகுபலி' நாயகன் பிரபாஸ் நடித்து முடித்துள்ள பிரமாண்டமான திரைப்படமான 'சாஹோ' திரைப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மூன்று மொழிகளில் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாகவுள்ளது. மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த படத்தை திரையிட தியேட்டர் அதிபர்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் அதே ஆகஸ்ட் 15ஆம் தேதி ஜெயம் ரவியின் 'கோமாளி' திரைப்படம் வெளியாகவிருப்பதாக சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை ஜெயம் ரவியும் தனது டுவிட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார். பிரபாஸ் மற்றும் ஜெயம் ரவி படங்கள் முதல்முறையாக நேருக்கு நேர் மோதவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது

அஜித்தின் 'நேர் கொண்ட பார்வை' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி ஆகஸ்ட் 1ஆம் தேதியா? அல்லது ஆகஸ்ட் 10ஆம் தேதியா? என்பது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. ஒருவேளை 'நேர் கொண்ட பார்வை' திரைப்படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாகவிருந்தால் 'கோமாளி' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி திட்டமிட்டபடி இருக்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்
பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'கோமாளி' திரைப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக முதல்முறையாக காஜல் அகர்வால் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் சம்யூக்தா ஹெக்டே, கேஎஸ் ரவிகுமார், யோகிபாபு, உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஹிப் ஹாப் தமிழா ஆதி இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். ஏற்கனவே ஜெயம் ரவியின் 'தனி ஒருவன்' படத்திற்கும் இவர்தான் இசையமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது


இதில் மேலும் படிக்கவும் :