கோச்சடையான் பட விவகாரம் ! போலீஸாரிடம் அவகாசம் கேட்ட லதா ரஜினிகாந்த்

latha rajinikanth
Last Updated: ஞாயிறு, 12 மே 2019 (13:06 IST)
கோச்சடையான் பட விவகாரம் மற்றும் மோசடி குறித்து ஏட்பீரோ விளம்பர நிறுவனம் கொடுத்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட உள்ளாதால் இந்த மாதம் வரும் 6 ஆம் தேதி அன்று நேரில் ஆஜராக வேண்டும் என்று ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்துக்கு பெங்களூர் போலிஸார் நோட்டீஸ் அனுப்பியிருந்தனர்.
இந்நிலையில், லதா ரனிஜிகாந்த்  அதற்குப்  பதில் அனுப்புள்ளார்.  பெங்களூர் போலீஸார் அனுப்பியிருந்த நோட்டீஸ் தனக்கு 4 ஆம் தேதிதான் கிடைத்தது என்றும், இப்போது தான் பிரயாணம் மேற்கொண்டிருப்பதால் தன்னால் ஆஜராக இயலாது என்று விளக்கம் கொடுத்துள்ளார்.
 
மேலும் வரும் வரும் 6 ஆம் தேதி ஆஜராவதற்குப் பதிலாக, வரும்  20 ஆம் தேதிக்கு மேல் நேரில் ஆஜராகி விளக்கம் தர அனுமதிக்க வேண்டும் என பெங்களூர் போலீஸாரிடம் அவகாசம் கேட்டுள்ளதாகத் தகவல் வெளியாகின்றன.


இதில் மேலும் படிக்கவும் :