செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By VM
Last Updated : வியாழன், 13 டிசம்பர் 2018 (16:42 IST)

இந்திய சினிமாவிலேயே மலேசியாவில் 2.0 செய்த சாதனை

ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் நடித்துள்ள படம் 2.0. இந்த படம் தமிழ் திரையுலகில் இதுவரை இல்லாத அளவுக்கு வசூல் மழை பொழிந்து வருகிறது. தொழில்நுட்ப ரீதியாக பிரம்மாண்டமான படம் என்ற பாராட்டை 2.0 பெற்றுள்ளது.
சென்னையில் பாகுபலி 2 நிகழ்த்திய வசூல் சாதனையை 2.0 முறியடித்ததை நாம் அறிவோம். இந்த படம் இந்தியிலும் 100 கோடிக்கு மேல்  வசூலாகி சாதித்தது. இந்நிலையில், 2.0 மலேசியாவில் பெரும் சாதனை படைத்தியுள்ளது.
 
இந்திய சினிமாவிலேயே மலேசியாவில் அதிகம் வசூல் செய்த படமாக 2.0 வந்துள்ளது. இப்படம் அங்கு சுமார் ரூ. 27 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.