செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: செவ்வாய், 3 நவம்பர் 2020 (16:53 IST)

பாஜகவில் இணைந்த பிரபல தயாரிப்பாளர்: திரையுலகில் பரபரப்பு!

பாஜகவில் இணைந்த பிரபல தயாரிப்பாளர்: திரையுலகில் பரபரப்பு!
கடந்த சில மாதங்களாக பாஜகவில் இணையும் திரையுலக நட்சத்திரங்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டு இருக்கின்றது என்பதை பார்த்து வருகிறோம். சமீபத்தில் கூட நடிகை குஷ்பு பாஜகவில் இணைந்தார் என்பதும் அவருக்கு விரைவில் முக்கிய பதவி கொடுக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது 
 
இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி பிரபல தயாரிப்பாளரும் கேஜேஆர் ஸ்டூடியோ உரிமையாளருமான ராஜேஷ் பாஜகவில் இணைந்துள்ளார். சமீபத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் சமீபத்தில் வெளியான க/பெ ரணசிங்கம்’ உள்பட ஒருசில திரைப்படங்களை இவர் தயாரித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
பாஜக தலைவர் தமிழக பாஜக தலைவர் எல் முருகன் தலைமையில் கேஜேஆர் ராஜேஷ் பாஜகவில் இணைந்துள்ளார் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தயாரிப்பாளர் ராஜேஷை அடுத்து வேறு யாரெல்லாம் பாஜகவில் இணைய உள்ளனர் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்