செவ்வாய், 4 பிப்ரவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. கிசு கிசு
Written By siva
Last Modified: செவ்வாய், 3 நவம்பர் 2020 (07:55 IST)

பாஜகவுக்கு பதில் அதிமுக, திமுக: நடிகர்களின் திடீர் முடிவு!

பாஜகவுக்கு பதில் அதிமுக, திமுக: நடிகர்களின் திடீர் முடிவு!
கடந்த சில நாட்களாக பாஜகவின் திரைத்துறையில் உள்ள பிரபலங்கள் இணைந்து வருகின்றனர் என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் மேலும் சில திரையுலக பிரபலங்கள் பாஜகவில் இணைய இருப்பதாகவும் அதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருப்பதாகவும் கூறப்பட்டது 
 
குறிப்பாக நடிகர் விஷால் பாஜகவில் சேர அதிக வாய்ப்பு இருப்பதாகவும் வனிதா விஜயகுமார் உள்ளிட்ட ஒருசில பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் தற்போது நடிகர்களின் பார்வை திமுக அதிமுக பக்கம் திரும்பியுள்ளது
 
பாஜகவில் பேச்சுவார்த்தை செய்துகொண்டிருந்த விஷாலுக்கு திடீரென திமுகவில் இருந்து அழைப்பு வந்ததாகவும், அவர் திமுகவில் சேர்ந்தால் முக்கிய பதவி கொடுக்கப்படும் என்று கூறப்பட்டதாகவும் இதனால் விஷாலின் பார்வை திடீரென திமுக பக்கம் திரும்பி உள்ளதாகவும் கூறப்படுகிறது 
 
அதேபோல் நடிகரும் இயக்குனருமான கே பாக்யராஜ் பாரதிய ஜனதாவில் சேர முடிவு செய்ததாகவும் ஆனால் அவருக்கு அதிமுகவில் இருந்து அழைப்பு வந்ததாகவும் இதனால் அதிமுகவில் இணைய அவர் முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது 
 
தேர்தல் நேரத்தில் முக்கிய திரையுலக பிரபலங்களை அரசியல் கட்சிகள் இழுப்பது இந்த முறையும் தொடர்ந்து நடந்துவரும் நடைபெற்று வருகிறது என்பதும், தேர்தலுக்கு முன் இன்னும் யாரெல்லாம் அரசியல் கட்சியில் இணைவார்கள் என்பதையும் பொறுத்திருந்து பார்ப்போம்