திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: திங்கள், 2 நவம்பர் 2020 (21:07 IST)

பாஜக யாத்திரை தொடக்கவிழாவில் பங்கேற்கவுள்ள நடிகை குஷ்பு !

தமிழகத்தில் பாஜக கட்சி சார்பில் அக்கட்சியின் தலைவர் வெற்றிவேல்
தலைமையில் அரசியல் யாத்திரை நடத்தப்படவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.


இந்நிலையில், தமிழகம் முழுவதும் சுமார் 70 இடங்களில் பொதுக்கூட்டங்கள் நடத்தத் திட்டமிட்டுள்ளது.

அடுத்தமாதம் (டிசம்பர்) 6 ஆம் தேதி தொடங்கவுள்ள இந்த யாத்திரை திருச்செந்தூரில் நிறைவடைகிறது. நிறைவுவிழாவில் அக்காட்சியின் தேசிய தலைவர் ஜேபி நட்டா கலந்து கொள்ளவார் எனத் தெரிகிறது.

இந்நிலையில் நடிகை குஷ்பு  இந்த யாத்திரை தொடக்கவிழா நடைபெறவுள்ள திருத்தணியில் கலந்துகொள்ளவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.