ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: செவ்வாய், 5 மார்ச் 2024 (07:25 IST)

நல்ல விமர்சனங்களைப் பெற்ற ‘கிடா’ படத்தின் இயக்குனரின் அடுத்த படத்தில் சசிகுமார்!

இயக்குனர் ரா வெங்கட் இயக்கிய முதல் படமான ‘கிடா’கடந்த ஆண்டு தீபாவளிக்கு ரிலீஸ் ஆகி நல்ல விமர்சனங்களைப் பெற்றது. ஆனால் இந்த படம் வணிக ரீதியாக வெற்றிப்படமாக அமையவில்லை.  படத்தைப் பார்த்த ஒரு சில ரசிகர்கள் சமூகவலைதளங்களில் பாராட்டி பதிவுகளை இட்டு வந்தனர். ஆனால் பல இடங்களில் படத்தின் காட்சிகள் போதுமான ரசிகர்கள் வராததால் ரத்து செய்யப்பட்டன. இது சம்மந்தமாக அந்த படத்தின் இயக்குனர் வெங்கட் சமூகவலைதளத்தில் தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தார்.

அதன் பிறகு ஓடிடியில் ரிலீஸாகி இந்த படம் நல்ல கவனத்தைப் பெற்றது. இந்நிலையில் இப்போது இயக்குனர் ரா வெங்கட்டை அழைத்து தன்னுடைய அடுத்த படத்தை இயக்கும் பொறுப்பைக் கொடுத்துள்ளார் முன்னணி நடிகரான சசிகுமார். சமீபத்தில் சசிகுமாரை சந்தித்து வெங்கட் கதையைக் கூறியதாகவும் அந்த கதை சசிகுமாருக்கு பிடித்ததால் அவரே தயாரிப்பாளரை பரிந்துரைத்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

விரைவில் இந்த படம் சம்மந்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என சொல்லப்படுகிறது.