ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : வியாழன், 19 அக்டோபர் 2023 (14:13 IST)

லியோ பட காட்சி ரத்து: தியேட்டர் மீது கல் வீசிய ரசிகர்கள்

vijays leo
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய்.  இவர், திரிஷா, அர்ஜூன், சஞ்சய் தத், மிஸ்கின் ஆகியோருடன் இணைந்து நடித்துள்ள படம் லியோ.  இப்படத்தை  லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார்.

அனிருத் இசையமைப்பில், 7 ஸ்கீரின் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள  இப்படம் வரும் (அக்டோபர் 19 ஆம் தேதி) இன்று  உலகம் முழுவதும் உள்ள தியேட்டர்களில் ரிலீஸாகியுள்ளது.

இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், இப்படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

சேலம் மாவட்டம் ஆத்தூர் நகரில் உள்ள தியேட்டர்களில்  இன்று லியோ படம் திரையிடப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அப்போது, தியேட்டர்கள் முன்பு திரைப்படம் காட்சிகள் செய்யப்பட்டு உள்ளது என்று அறிவிப்பு பலகை வைக்கப்பட்டிருந்தது.  இந்த நிலையில், காட்சிகள் ரத்து செய்யப்பட்டதால் சில ரசிகர்கள் ஒரு தியேட்டரில் கல் வீசி தாக்குதல் நடத்தினர். இதில், தியேட்டர் கண்ணாடி உடைந்தது. இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.