வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Modified: திங்கள், 4 மார்ச் 2024 (11:07 IST)

2026ல் விஜய் முதல்வராக வேண்டும்!? பாண்டி முனீஸ்வரர் கோவிலில் கிடா வெட்டி வழிபாடு! - கிடா விருந்தால் குஷியான ரசிகர்கள்!

Vijay Makkal Iyakkam
நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம்' என்ற பெயரில் கடந்த மாதம் அரசியல் கட்சி தொடங்கினார்.


 
அன்றிலிருந்து மதுரையில்விஜய் ரசிகர்கள் ஏதாவது வித்தியாசமாக செய்து மக்களிடையே நற்பெயர் எடுத்து வருகிறார்கள்.

இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்  2026ல் தமிழக முதல்வராக பொறுப்பேற்க வேண்டி மதுரை மாவட்டம் விஜய் ரசிகர் மன்ற தலைவர் கல்லணை தலைமையில்  மதுரையின் காவல் தெய்வம் பாண்டி முனீஸ்வரர் ஐகோவிலில் கிடா வெட்டி வழிபாடு நடைபெற்றது

 
இந்த விழாவில்  தமிழக வெற்றிக்  கழகத்தின் மதுரை மாவட்டம் வடக்கு தலைமை கழக நிர்வாகிகள் மற்றும்ஏராளமான பொதுமக்கள்  பங்கேற்றனர்.

முன்னதாக தமிழக வெற்றிக்கழக தேர்தல் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டத்தில் 2026ல் தேர்தலில் பணியாற்றுவது குறித்தே பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.

கிடா விருந்தினை ஒரு பிடி பிடித்த பொதுமக்களும் ரசிகர்களும் அரசியல் கட்சிகள் அடிக்கடி இது போன்று வயிறாற சாப்பாடு போட்ட நல்லா இருக்கும் என்றனர்