1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: புதன், 5 மார்ச் 2025 (09:56 IST)

ரசிகர்களின் கதறலுக்கு செவி கொடுத்தாரா AK?... அடுத்த படம் சிறுத்தை சிவாவுடன் இல்லையாம்!

சூர்யா நடிப்பில் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக உருவாக்கத்தில் இருந்த ‘கங்குவா’ திரைப்படம்  ரிலீஸான போது இதுவரை தமிழ் சினிமாவில் எந்த படமும் காணாத ஒரு மோசமான எதிர்மறை விமர்சனத்தை எதிர்கொண்டது.

இதற்குப் பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் மிக முக்கியமானக் காரணமாக ஒன்றை சொல்லலாம். படம் ரிலீஸாவதற்கு முன்பே படத்தைப் பற்றி படக்குழுவினர் கொடுத்த ஓவர் பில்டப்தான் அது. அதே போல தொடர்ந்து சுமாரானக் கதைகளை வைத்தே மாஸ் ஹீரோக்களின் படங்களை ஒப்பேற்றும் சிறுத்தை சிவாவின் உழைப்பில்லாத திரைக்கதையும்  மற்றொரு காரணம்.

இதனால் சிறுத்தை சிவாவின் அடுத்த படம் அஜித்துடன் என சொல்லப்பட்ட போது அஜித் ரசிகர்களே ‘அதுமட்டும் வேண்டாம்’ என சோஷியல் மீடியாவில் கதற ஆரம்பித்தனர். இந்நிலையில் இப்போது அவர்களுக்கு ஒரு நல்ல செய்தி வெளியாகியுள்ளது. அது என்னவென்றால் அஜித், தன்னுடைய அடுத்த படத்தை சிறுத்தை சிவாவுக்குத் தராமல் ஆதிக் ரவிச்சந்திரனுக்குக் கொடுக்கலாம் என்ற முடிவை எடுத்துள்ளாராம்.