செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 31 ஜூலை 2021 (16:20 IST)

ஷங்கரை சந்தித்த பாலிவுட் ஹீரோயின்… உறுதியான வாய்ப்பு!

நடிகை கியாரா அத்வானி ஷங்கரை சந்தித்து பேசியுள்ள புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் கமல்ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2 படத்தை இயக்கி வந்த நிலையில் திடீரென அந்த படத்தை கைவிட்டுவிட்டு தற்போது ராம்சரண் தேஜா நடித்த உள்ள தெலுங்கு படம் ஒன்றை இயக்கவுள்ளார். இந்த படத்தை தெலுங்கு சினிமாவின் முன்னணி தயாரிப்பாளராக இருந்து வரும் தில் ராஜு தயாரிக்க உள்ளார். இந்த படத்தில் கதாநாயகிகளாக கியாரா அத்வானி மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகியோர் நடிக்க உள்ளதாக சொல்லப்பட்டது.

ஆனால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. இந்நிலையில் நடிகை கியாரா அத்வாணி இன்று இயக்குனர் ஷங்கரை சந்திக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. இதன் மூலம் கியாரா அத்வானி ஷங்கர் படத்தில் நடிப்பது உறுதியாகியுள்ளது.