செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 31 ஜூலை 2021 (15:49 IST)

ரஜினியின் அமெரிக்கா செக்கப்… மருத்துவர்கள் சொன்னது என்ன?

நடிகர் ரஜினி அமெரிக்காவுக்கு தன் உடல் பரிசோதனைகளுக்காக சென்று வந்தார்.

சில ஆண்டுகளுக்கு முன்னர் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்ட நடிகர் ரஜினிகாந்த் பரபரப்பாக படங்களில் நடித்து வந்தார். இந்நிலையில் சில வாரங்களுக்கு முன்னர் அவர் அமெரிக்காவுக்கு சென்று செக்கப் செய்துகொண்டு திரும்பியுள்ளார். இப்போது அதே சுறுசுறுப்போடு படங்களில் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.

இந்நிலையில் மருத்துவர்கள் ரஜினிக்கு சொன்ன அறிவுரை என்ன என்பது வெளியாகியுள்ளது. ரஜினியின் உடல்நிலை மிகவும் நல்ல நிலையில் இருப்பதாகக் கூறிய மருத்துவர்கள் இன்னும் 5 வருடங்களுக்கு செக்கப்புக்கே வரவேண்டாம் எனக் கூறியுள்ளனராம். அதனால் அடுத்த ஐந்து வருடங்களுக்கு ரஜினி வரிசையாக படங்களில் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.