சிம்புவுக்காக காத்திருக்கும் தூங்கா நகரம் இயக்குனர்!
இயக்குனர் கௌரவ் நாராயணன் சிம்புவுக்கு கதை சொல்வதற்காக காத்திருக்கிறார்.
இயக்குனர் கௌரவ் தூங்கநகரம் படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பின்னர் சிகரம் தொடு மற்றும் இப்படை வெல்லும் ஆகிய படங்களை இயக்கினார். ஆனால் இந்த படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. இந்நிலையில் இப்போது ஐசரி கணேஷ் தயாரிப்பில் ஒரு படத்தை இயக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.
தனது கதை சிம்புவுக்கு பொருத்தமாக இருக்கும் என காத்திருந்துள்ளார். ஆனால் இப்போது சிம்பு ஐசரி கணேஷ் தயாரிப்பில் நதிகளில் நீராடும் சூரியன் மற்றும் கொரோனா குமார் ஆகிய படங்களில் நடிக்க உள்ளதால் தன் படத்தில் நடிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.