காது பத்திரம் - நடிகர் அஜித்குமார் அறிவுரை
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் அஜித்குமார். இவர் தற்போது ஹெச் வினோத்குமார் இயககத்தில் போனி கபூர் தயாரிப்பில் அஜித்61 படத்தில் வருகிறார்.
இந்த ஆண்டில் மிகப்பெரிய எதிர்பார்பை ஏற்படுத்தியுள்ள படங்களில் இப்படமும் ஒன்று. இந்த நிலையில், தற்பபோது அஜித்61 பட ஷூட்டிங் விசாகபட்டிணத்தில் நடந்து வருகிறது.
இந்த நிலையில் நடிகர் அஜித்குமார் கூறிய அறிவுரையை அவரது மேலாளர் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், உங்கள் காதுகளை பத்திரமாகப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்; காதுகளில் அடிக்கடை சத்தம் வந்தால் கேட்கும் திறனை இழக்க வாய்ப்புண்டு எனக் கூறியதாகத் தெரிவித்துள்ளார்.