பிரபல ஓடிடியில் வெளியானது பா ரஞ்சித்தின் நட்சத்திரம் நகர்கிறது திரைப்படம்
இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் நட்சத்திரம் நகர்கிறது.
இயக்குனர் பா ரஞ்சித் சார்பட்டா பரம்பரை படத்தின் வெற்றிக்குப் பிறகு இப்போது முற்றிலும் வளர்ந்து வரும் கலைஞர்களை வைத்து நட்சத்திரம் நகர்கிறது என்ற படத்தை இயக்கியுள்ளார். வழக்கமான தன் தொழில் நுட்பக்கலைஞர்கள் இல்லாமல் நிறைய புதுமுகக் கலைஞர்களோடு இந்த படத்தில் பணியாற்றி வருகிறார். இந்த திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 31 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
படம் நல்ல வரவேற்பைப் பெற்றாலும், பெரியளவில் ரசிகர்களை திரையரங்குகளை நோக்கி இழுக்கவில்லை. இந்நிலையில் தற்போது நெட்பிளிக்ஸ் தளத்தில் இந்த படம் தற்போது ஸ்ட்ரீம் ஆக உள்ளது.