1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: ஞாயிறு, 18 செப்டம்பர் 2022 (20:17 IST)

படம் ரிலீசான 3 நாட்களுக்கு பின் விமர்சனம் எழுதுங்கள்: தயாரிப்பாளர்கள் சங்கம்

producers
படம் ரிலீஸ் ஆன மூன்று நாட்களுக்குப் பின்னர் விமர்சனம் எழுதுங்கள் என விமர்சகர்கள் மற்றும் பத்திரிகையாளர்களை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது
 
ஒரு திரைப்படம் நான்கு மணி காட்சி ரிலீஸ் ஆன நிலையில் ஏழு மணிக்கே முதல் விமர்சனம் ஊடகங்களில் வந்து விடுகிறது. இதனால் நெகட்டிவ் விமர்சனம் என்றால் அடுத்த காட்சிக்கு கூட்டம் குறைந்து விடுகிறது 
 
இந்த நிலையில் படம் ரிலீஸ் ஆன மூன்று நாட்கள் கழித்து விமர்சனங்கள் எழுதுங்கள் என்று தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது
 
இதற்கு பத்திரிகையாளர் தரப்பில் கூறிய போது ஒரு படத்தை 4 மணி காட்சி பார்த்துவிட்டு 7 மணிக்கு விமர்சனம் செய்து அந்த படம் நன்றாக இருந்தால் அடுத்த காட்சிகளுக்கு கூட்டம் குவியும் என்றும் இதனை ஏன் தயாரிப்பாளர்கள் மனதில் வைத்துக் கொள்ளவில்லை என்றும் கூறியுள்ளனர்.