இந்த ஜோடி சூப்பரா இருக்கு - "தசரா" ஷூட்டிங் ஸ்டில்ஸ் வெளியிட்ட கீர்த்தி சுரேஷ்!
நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் , தெலுங்கு சினிமாவின் பொக்கிஷம் என்று சொல்லுமளவிற்கு மிகச்சிறந்த நடிகையாக வலம் வருகிறார். பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து பெரியவர்கள் முதல் சிரியவர்களுக்கும் மிகவும் பிடித்தமான நடிகையாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ். குறிப்பாக 'நடிகையர் திலகம்' படத்தின் வெற்றிக்கு பிறகு இவரை புக் பண்ண பல இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் போட்டி போட்டுக்கொண்டு வந்தார்கள்.
ஆனால், அம்மணி பாலிவுட்டில் ஜொலிக்கவேண்டும் என்ற கனவோடு உடல் எடையை குறைத்து வாய்ப்புகளை இழந்துவிட்டார். இதனால் மீண்டும் தென்னிந்திய சினிமா பக்கம் வந்து மீண்டும் ஹிட் படங்களை கொடுத்து வருகிறார். தற்போது நானியுடன் தசரா படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் ப்ரோமோஷனுக்காக முழு வீச்சில் இறங்கியுள்ள கீர்த்தி சுரேஷ் தற்போது தசரா படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் போட்டோக்களை வெளியிட்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.