1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: திங்கள், 27 மார்ச் 2023 (08:12 IST)

சென்சாரில் சிக்கிய நானியின் தசரா… 36 இடங்களில் கட்!

நானி நடிப்பில் ஆக்சன் மற்றும் மாஸ் கலந்த பொழுதுபோக்கு திரைப்படமாக ‘தசரா’ திரைப்படம் உருவாக உள்ளது. அறிமுக இயக்குநர் ஶ்ரீகாந்த ஒதெலா இந்த படத்தை இயக்குகிறார். ஶ்ரீ லக்‌ஷ்மி வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்  சுதாகர் செருகுரி தயாரிக்கும் “தசரா” திரைப்படம் பேன் இந்தியா திரைப்படமாக உருவாகி வருகிறது. இந்த படத்தில் கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார்.

இந்த படம் பேன் இந்தியா ரிலீஸாக மார்ச் 30 ஆம் தேதி ரிலீஸாக உள்ளது. இந்நிலையில் படத்தின் ப்ரமோஷன் பணிகள் நடந்து வரும் நிலையில் படம் சமீபத்தில் சென்சாருக்கு அனுப்பப்பட்டது. அதில் 36 இடங்களில் கட் மற்றும் குரல் நீக்குதல் கரெக்‌ஷன்களை தணிக்கைக் குழு கொடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.