கீர்த்தி சுரேஷ் அடுத்த படத்தின் காமெடி டைட்டில் அறிவிப்பு
பிரபல நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படத்தின் காமெடியான டைட்டில் சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த டைட்டில் போஸ்டர் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.
கேஜிஎப், காந்தாரா உள்பட சூப்பர் ஹிட் படங்களை எடுத்த ஹோம்பாலே பிலிம்ஸ் என்ற நிறுவனம் தயாரிக்கும் அடுத்த திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்க இருப்பதாக வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.
நாயகிக்கு முக்கியத்துவம் தரக்கூடிய கதையம்சம் கொண்ட இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் இந்த படத்திற்கு ரகு தாத்தா என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இதுகுறித்த போஸ்டரையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ள நிலையில் இந்த போஸ்டர் தற்போது இணையதளங்களில் வைரலாக இவர்களது.
Edited by Siva