“சுதா கொங்கராவின் படம் பயோபிக் இல்லை…” ஹோம்பாலே பிலிம்ஸின் அறிவிப்பு!
பிரபல விமான நிறுவன அதிபர் ஜி ஆர் கோபிநாத் வாழ்க்கை வரலாறு திரைப்படமான சூரரை போற்று என்ற படத்தை இயக்கிய சுதா கொங்கரா அடுத்ததாக ரத்தன் டாடா வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை இயக்க உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த படத்தில் ரத்தன் டாடா கேரக்டரில் சூர்யா அல்லது அபிஷேக்பச்சன் ஆகிய இருவரில் ஒருவர் நடிப்பார்கள் என்று சொல்லப்பட்டது. இந்த படத்தை கேஜிஎஃப் தயாரிப்பு நிறுவனமான ஹோம்பலே பிலிம்ஸ் தயாரிக்கும் என சொல்லப்படுகிறது.
சுதா கொங்கரா தற்போது சூரரைப்போற்று என்ற படத்தின் ஹிந்தி ரீமேக்கை இயக்கி வரும் நிலையில் இந்த படத்தை முடித்தவுடன் அவர் ரத்தன் டாடா குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் இப்போது ஹோம்பலே பிலிம்ஸின் கிரியேட்டிவ் தயாரிப்பாளரான கார்த்திக் கௌடா “சுதா கொங்கராவின் திரைக்கதை பயோபிக் இல்லை. உண்மை சம்பவங்களை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டன” எனக் கூறியுள்ளார்.