1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 10 நவம்பர் 2022 (08:58 IST)

மாமன்னன் ரிலீஸ் அப்டேட் கொடுத்த உதயநிதி ஸ்டாலின்!

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் மாமன்னன் திரைப்படம் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் ரிலீஸ் ஆகும் என சொல்லப்படுகிறது.

இயக்குனர் மாரி செல்வராஜ் கர்ணன் படத்தின் வெற்றிக்குப் பிறகு இப்போது உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் ஒரு படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் வடிவேலு, பஹத் பாசில், கீர்த்தி சுரேஷ் ஆகியோர்  முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க, ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் முழுவதும் நிறைவடைந்ததாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இப்போது இசையமப்பாளர் ஏ ஆர் ரஹ்மானோடு இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ள இயக்குனர் மாரி செல்வராஜ் இசையமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் இப்போது உதயநிதி ஸ்டாலின் கலகத்தலைவன் ரிலீஸ் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். அப்போது அளித்த ஒரு நேர்காணலில் மாமன்னன் அடுத்த ஆண்டு மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் ரிலீஸ் ஆகும் எனக் கூறியுள்ளார்.